இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்
இலங்கையில் கைது செய்யப்பட்ட 85 சீனப் பிரஜைகள் இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்த போது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த சீனப் பிரஜைகள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள்
85 பொலிஸ் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சீனப் பிரஜைகளுடன் விமானம் பயணித்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-880 என்ற சிறப்பு விமானம் இன்று அதிகாலை 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு புறப்பட்டதை விமான நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
