13 நாட்களில் 82 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
நடப்பு ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் விபத்துகளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. ஜி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் மட்டும் 77 பெரும் விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் நடைமுறை
இவ்வாறு இடம்பெற்ற விபத்துகளில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியமையால் ஏற்பட்டவையாகும்.

இதனிடையே, இந்தக் காலப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்காக 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை பரிசோதிக்க 75 ஆயிரம் கருவிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மதுவைத் தவிர ஏனைய போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் முன்னோடித் திட்டம் தற்போது கொழும்பு பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |