24 மணித்தியாலங்களில் 81 பேர் கைது! 337 பேருக்கு எச்சரிக்கை!!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக சுகாதார அமைச்சு பல சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை பொருட்படுத்தாது உள்ளனர்.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த 145 வாகனங்களில் வந்த 337 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri