லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு 800 லட்சம் ரூபாய் இழப்பு!
தற்போதைய விலையில் எரிவாயுவை வழங்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் லிட்ரோ நிறுவனமும் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அந்த நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க (Thushara Jayasinghe) தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நஷ்டத்தில் சந்தைக்கு எரிவாயுவை வழங்குவதன் மூலம் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 10 பில்லியன் ரூபா இருப்புக்களை செலவிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நிறுவனத்தை நிலைநிறுத்த எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இன்று, உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 665 டொலராக உயர்ந்துள்ளது, அடுத்த மாதம் 740 டொலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri