வாகன இறக்குமதிக்கான தற்போதைய விலையில் 80 வீதம் குறைப்பு: ஜனாதிபதி வேட்பாளர் உறுதி
தற்போதைய சந்தை விலையை விட 80 வீதம் வரை குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
தமது, புதிய வாகன இறக்குமதி கொள்கை தொடர்பில் இன்று (06.09.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "எந்தவொரு வேட்பாளரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாகன இறக்குமதி திட்டத்தை உள்ளடக்கியிருக்கவில்லை.
தேர்தல் விஞ்ஞாபனம்
குடிமக்களுக்கு குறைந்த விலையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்காமல், சொகுசு வாகனங்களை கடந்த ஆட்சியாளர்கள் தமக்கென இறக்குமதி செய்துள்ளார்கள்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 15 வருடங்கள் பழமையான ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தையை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
உதாரணமாக, 2010 - டொயோட்டா ப்ரியஸ் வாகனத்தை இறக்குமதி செய்ய, மின்கலம் மாற்றுதல், புதிய டயர்கள் மற்றும் 50 வீத அரசு வரி உட்பட 2.2 மில்லியன் ரூபாய் செலவாகும்.
எனினும், தற்போது, அதே ரக வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான செலவு சுமார் 20 மில்லியன் ரூபாய்கள். இலங்கை டொலர் நெருக்கடியை எதிர்கொண்டாலும், நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் வாகனங்கள் தேவை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |