வெளிநாடொன்றில் 8 வயது சிறுமியை சூட்கேஸில் கடத்திய நபர்! சி.சி.ரி.வி கமராவில் சிக்கிய ஆதாரம்
பிலிப்பைன்ஸில் 8 வயது சிறுமி ஒருவர் சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய், சிறுமி இல்லாததை கண்டு உடனடியாக சி.சி.ரி.வி காட்சிகளை சோதனையிட்டுள்ளார்.
இதன்போது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சூட்கேஸ் ஒன்றை கொண்டு சென்ற நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடரந்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |