மகனை தேடிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி - குழியொன்றில் இருந்து எடுக்கப்பட்ட உடல்!
பொகவந்தலாவை கியூ பிரதேசத்தில் 8 வயதுடைய சிறுவன் ஒருவர் குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று(3) மாலை இடம்பெற்றுள்ளது.
சிறுவன் பலி
வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு வெளியில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்த சிறுவனை பெற்றோர் உள்ளிட்டோர் மீட்டு எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கியூ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 3ல் கல்வி பயிலும் மாணவராவார்.
மேலதிக விசாரணை
குறித்த சிறுவனின் தந்தை வீடு நிர்மாணப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தவேளை, சிறுவன் தனது கைகளை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட குழிக்கு அருகில் சென்றுள்ளார். இதன்போது அவர் தவறி விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டநேரமாகியும் தனது மகனை காணவில்லை என்பதால், தந்தை விட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சிறுவனின் பாதணிகள் இரண்டும் குழியில் மிதந்துகொண்டிருந்துள்ளன.
அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே சிறுவன் உயிரழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலதிக தகவல் - சதீஷ் மற்றும் திவாகரன்








