மட்டக்களப்பு - வவுணதீவில் குளவி தாக்குதல்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (Photos)
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பனை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று புன்கிழமை (08.11.2023) காலை 7 மணியளில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
வவுணதீவு - கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் சம்பவதினமான இன்று காலை 7.00 மணியவில் வீதியால் நடந்து சென்ற நிலையில், குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்கள் மீது குத்தி தாக்கியது.
இதனால் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட
நிலையில் அருகிலுள்ள தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பனை மரங்களில் இருந்து குளவிக் கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
