மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் காரில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
குறித்த வர்த்தகரின் சடலம் நேற்று (26) மஹவ, தியதம்பையில் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காரில் பல மில்லியன் ரூபா...
இதேவேளை, அவர் இறப்பதற்கு சற்று முன்பு தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2.5 மில்லியன் ரூபாவை பொலிஸார் அவருடைய காரில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பெருந்தொகை பணம் எந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் அது கொலையுடன் தொடர்புடையதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணை
குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் குறித்த தொழிலதிபர், முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய, பொலிஸாரின் விசாரணையில், காணாமல் போன தொழிலதிபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri