மேலும் பல இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், இன்று (21) காலை குறித்து 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இதற்கமைய இலங்கை இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் மூன்று லிட்டர் தண்ணீருடன் 8 நபர்கள் படகோட்டிகளினால் இறக்கி விடப்பட்ட நிலையில் இந்திய கடலோர காவல்படை இன்று மீட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து மரைன் பொலிஸார், அவர்களை விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்துள்ளாகவும் மேலும் ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 134 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இதில் ஒரு மூதாட்டி மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழி பாதை ஊடாக பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri
