திருகோணமலையில் புதையல் தோண்ட முயன்ற 8 பேர் அதிரடி கைது
ஈச்சிலம்பற்று- இலங்கைத்துறை முகத்துவாரம் சந்திப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட முயன்ற சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(23.6.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைதுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து புதையல்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் நவீன ஸ்கேன் இயந்திரம், ஒரு வேன் மற்றும் அகழ்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam