திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8 பேர் மரணம்! 137 பேருக்கு தொற்று
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 72 ஆண்களும், 65 பெண்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 1253 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 9 நாட்களுக்குள் 51 பேர் மரணித்துள்ளதாகவும் இதுவரை மாவட்டத்தில் 11067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 299 பேர் இதுவரை மரணித்துள்ளதாகவும் 159 கர்ப்பிணி தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri