பிரமிட் திட்ட மோசடி: விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
சுமார் 8 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய இரண்டும் இரு சந்தேகநபர்கள் மீது விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த முறைப்பாடு தொடர்பில் ஒரு ஆணும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வர்த்தக சமூகத்தை நிறுவுதல் என்ற போர்வையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 22,000 பேரிடம் இருந்து 8 பில்லியன் ரூபாய்களை அறிவிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
இது பிரமிட் திட்டத்தில் நடந்த மோசடியைப் போன்றது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான கல்விப் பொதிகளை விநியோகிப்பதன் மூலம் வர்த்தக சமூகத்தை நிறுவி நாட்டுக்கு டொலர்களை பெற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாக சந்தேக நபர்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நிறுவனமொன்றில் முதலீடு செய்து பெறப்படும் தரகுப்பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு வழங்குவதாகவும், அவர்கள் உறுதியளித்துள்ளனர் .
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள், இதற்காக குருநாகல் பிரதேசத்தில் வணிகப் பாடசாலை மற்றும் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து பணம் முதலீடு செய்பவர்களிடம் காட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த வர்த்தகத்தில் சிலர் 1.5 மில்லியன் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
