இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம்: அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து
எல்லா வழிகளிலும் உதவி வரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2024) அமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பலமான பொருளாதாரம்
வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ஒட்டுமொத்த உலகுக்குமே அகிம்சையை போதித்த நாடு தான் பாரத தேசமாகும். ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அந்நாடு கருதப்படுகின்றது.
இன்று உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல தொழில்நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறி வருகின்றது.
நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் இந்தியா இன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது.
தெற்காசிய பிராந்தியத்தின் காவல்
அனைத்து இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவு, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு உதவி வழங்கிய நாடு.
அதனை என்றும் மறக்கமாட்டோம். எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருகின்றது. அதனையும் இந்த நேரத்தில் நினைவுகூருகின்றேன்.
தெற்காசிய பிராந்தியத்தின் காவலாக விளங்கும் இந்தியா மென்மேலும் உயரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
