75ஆவது சுதந்திர தின விழா:சமூக ஊடகத்தில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகப்புத்தகத்தில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட 40 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகமவில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது முகநூலில் பல்வேறு கருத்துக்களை (பதிவுகளை) பதிவிட்டதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான கருத்துகளை (பதிவுகளை) தயாரித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த சந்தேகநபரின் முகநூல் கணக்கை சோதனை செய்து விரிவான அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் நுகேகொட கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
