கோவிட் காரணமாக மரணித்தவர்களில் 7587 பேர் இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள்
கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 7587 பேர் ஒரு மாத்திரையேனும் தடுப்பூசி ஏற்றப்படாதவர்களாவர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் மொத்த மரணங்களில் 80.7 வீதமான மரணங்கள் தடுப்பூ ஏற்றப்படாதவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாத்திரை தடுப்பூசிகளைளயும் எடுத்துக் கொண்டவர்களில் 388 பேர் இதுவரையில் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்.இது மொத்த மரணங்களில் 4.1 வீதமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே 60 வயதுக்கும் மேற்பட்ட உறவினர்கள், பெற்றோர் அல்லது நண்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களை உடனடியாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அவர்களை ஊக்கப்படுத்துமாறு டொக்டர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில், இதுவரையில் கோவிட் காரணமாக மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9806 என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் 202 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.



