இலங்கையில் பெண்களுக்கு நடக்கும் மோசமான சம்பவம்
நாட்டில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் 75 வீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தைக் குறிக்கும் வகையில் பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் நடைபெற்ற விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் ஐந்து பெண்களில் ஒருவர், அதாவது 20 வீதம் பேர், வீட்டு வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.
சர்வதேச பெண்களின் நிலைமை
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளி விபரங்களின் படி, 315 மில்லியன் பெண்கள் உடல், உளவியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏதேனும் ஒரு வகையான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்க சமூகத்தின் ஒன்றிணைந்த முயற்சி தேவை.கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் சமூகத்தை மாற்றுவதோடு வன்முறையை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.