ஐ.எஸ் அமைப்புடன் 702 இலங்கையர்களுக்கு தொடர்பு? TID வெளியிட்ட தகவல்
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 702 இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரச புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட மொஹமட் சம்சுடீன் என்ற ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
குறித்த நபரின் வட்சப் குழுவுடன் 702 இலங்கையர்களும் தொடர்புபட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறித்த 702 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.