70000 கோவிட் தடுப்பூசிகள் மாயம்
கொழும்பு மாவட்டத்தில் 11 மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட 70000 தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸ் குறித்த அனைத்து விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தனவுக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் மற்றும் தற்போது போடப்படும் தடுப்பூசிகள் குறித்த தரவுகளை கணனிமயமாக்குமாறு இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தரவுகளின் கணனிமயமாக்கலின் போது இந்த தடுப்பூசிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.
கொழும்பு மாவட்டத்தில் 400000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி தொடர்பான தகவல்களை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் முறையாக வழங்கவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
