ஏழு வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் அவரது அயல் வீட்டிற்கு சிறுமி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நீண்ட நேரமாகியும் சிறுமியை காணாத நிலையில் அயல் வீட்டார் தேடியுள்ளனர்.
இதன்போது அருகிலுள்ள கிணற்றில் சிறுமி விழுந்துள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
