பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவை பகுதியில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், நேற்று மாலை (23) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளவிக்கூடு
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எழுவரில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை மலைக்குள் இருந்த குளவிக்கூடொன்று, கொழுந்து கொய்த பெண்ணொருவர் கால்பட்டதால் கலைந்தமையால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        