நெடுந்தீவுக் கடற்பரப்பில் 7 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!
அத்துமீறி மீன்பிடி
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (26.10.2022) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவிற்கு தெற்கே 7 கடற்தொழிலாளர் பயணித்த இழுவை படகு தடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
7 பேர் கைது
இந்நிலையில் 7 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட போது குறித்த இழுவைப்படகும் கைப்பற்றப்பட்ட நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் மயிலிட்டி கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
