தமிழக முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை!
தமிழகம்- திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (05.04.2023) தமிழக அரசு இவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டு மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்துப் பராமரித்து வருகிறது.
நிலுவையிலுள்ள வழக்குகள்
இதன்படி, இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவில்லை.
விடுதலை
இந்தநிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறப்பு முகாமின் ஏழு பேருக்கு விடுதலைக்கான உத்தரவு ஆவணங்கள் கிடைத்ததையடுத்து, அவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் இந்த முகாமில் விடுதலை வேண்டி கோரிக்கைகளை
முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 21 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
