மட்டக்களப்பு நகரிலுள்ள 7 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு
மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று(02) உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நகர்ப்பகுதியிலுள்ள உணவகங்களை இன்று திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா
வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம்.
றிஸ்வான் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.








மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
