நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு
நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, ஹோமாகம, மஹரகம, பிட்டகோட்டே, கடுவெல மற்றும் கொதடுவ ஆகிய பகுதிகள் டெங்கு நுளம்பு பரவும் அதிக அபாயம் கொண்ட பிரிவுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டம் - அத்தனகல்ல, பியகம, திவுலப்பிட்டிய, ஜா-எல, களனி உள்ளிட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் கொண்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டம் - பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
மத்திய மாகாணம் - கண்டி மாவட்டத்தில் 03 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் - 03 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணம் - புத்தளம், கற்பிட்டி, வென்னப்புவ மற்றும் மஹவெவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஊவா மாகாணம் - பதுளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டம் – வரக்காபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan