மே 9ஆம் திகதி வன்முறையில் சேதமடைந்த 18 பேருந்துக்களால் 7 கோடி ரூபா நட்டம்
கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 18 பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
இதனால் 7 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி கோட்டா கோ ஹோம், மைனா கோ ஹோம் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது.
வன்முறை தாக்குதல்
அந்த வன்முறையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் எரிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டார். அந்த
வன்முறையின் போதே இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 18 பேருந்துக்கள் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
