பிரான்சில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து: தாய் மற்றும் 7 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழப்பு
பிரான்சில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தாயுடன் சேர்த்து 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களின் பின்னர் அந்நாட்டில் பதிவாகியுள்ள மிக மோசமான தீ விபத்து இதுவென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவர் தீயினால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் தரைத்தளத்தில் உள்ள சலவை இயந்திரம் பழுதடைந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
