கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மரணம் - பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது
கொழும்பு, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் 5 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவன் படித்த பாலர் பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்
சம்பவ தினத்தன்று குறித்த மாணவன் உட்பட மேலும் சில மாணவர்கள் குழு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீந்திக் கொண்டிருந்த போது, மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து மாணவன் களுபோவில மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது.
அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக பாலர் பாடசாலையின் பிரதி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, மாணவனுக்கு பொறுப்பான 2 ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர் மற்றும் 2 நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri