ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 23 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை
இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 676 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ் , 6,388 கிராம் மில்லி 385 கிராம் கஞ்சா, 1,037 போதை மாத்திரைகள் மற்றும் 3,957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam