இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள் - இலங்கை சகோதரர்களுக்கு நேர்ந்த கதி..!
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர இரண்டு சகோதரர்கள் முற்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று( 25.07.2026) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்பட்ட புறாக்கள்
இதன்போது, கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்ற நிலையில், அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்துள்ளன.
சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்..! ரவிகரன் எம்பி ஆதங்கம்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri