இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்திற்கு இதுவரை 700 மில்லியன் ரூபா
பேரிடனரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இதுவரை 700 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 635 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் 30,470 க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணயத்தில் வைப்பு
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியில் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பு செய்யக்கூடிய கணக்குகள் மூலம் இந்த நிதியத்திற்கு கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபாயை கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பணம் 33 நாடுகளுக்கு தொடர்புடைய கணக்குகள் மூலம் பெறப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக திறைசேரியை மேற்கோள் காட்டி சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி வரையான தகவல்களின் அடிப்படையில் 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணத்தை வைப்பு செய்துள்ளனர்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri