வருடாந்தம் வீசப்படும் பெருந்தொகையான பிளாஸ்டிக் கரண்டிகள்
இலங்கையின் சுற்றுச்சூழலில் வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கரண்டிகள் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் பயன்பாட்டிற்குப் பிறகு சுற்றுச்சூழலுக்கு விடப்படுகின்றது.
குறிப்பாக தயிர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களுக்காகவும், உணவு பதப்படுத்துபவர்களாலும் பிளாஸ்டிக் கரண்டிகள் பெரும்பாலும் நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை.
இதே அளவு பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றுச்சூழலுக்கு விடப்படுகின்றது. எனவே பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
