நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை : பலத்த பாதுகாப்புடன் யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படவுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அவசர இடமாற்ற நடவடிக்கை
இந்தக் கோரச் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் தற்போதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதன் காரணமாக, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும் நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்த அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, பலத்த பாதுகாப்புடன் 60 கைதிகள் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர் என்று அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri