சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீட்பு
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீஷெல்ஸ் கடலோர காவல்படையினராலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்
சிலாபம் - திகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி லொரென்சோ புத்தா - 4 என்ற பல இழுவை படகில் இவர்கள் ஆழ்கடல் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்பொது இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல் மைல் தொலைவில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் 6 கடற்றொழிலாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |