வவுனியாவில் ஆறு பிரபல உணவங்களுக்கு பூட்டு!
வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன.
குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
பூட்டு
இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப் பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.