வடக்கில் 6 கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கோவிட் -19 தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 451 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்குக் கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 81 வயது வயோதிபப் பெண்ணுக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவர்களில் 6 பேருக்குக் கோவிட - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 150 கைதிகளிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் பி.சி.ஆர். முடிவுகள் நாளையே கிடைக்கும்" - என்றார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam