நுவரெலியாவில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையம்: கைதானவர்களுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
நுவரெலியாவில் (Nuwara Eliya) சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மசாஜ் நிலையத்தில் நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் அடங்கலாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை இன்று (09) முன்னிலைபடுத்திய போது அனைவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நுவரெலியா (Nuwara Eliya) - பதுளை பிரதான வீதியோரத்தில் சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, நேற்று (07.10.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றின்
அனுமதிக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே அந்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, ஐந்து பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் அடங்கலாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணை நடவடிக்கை
நுவரெலியா பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த விடுதிக்கு பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அந்த இடம் தொடர்பில் உறுதிபடுத்தப்பட்ட நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் வெளிமடை, மொனராகலை, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரும் 32 - 47 வயது எல்லைக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
