கிண்ணியா படகு விபத்து! அறுவர் வீடு திரும்பினர் (VIDEO)
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று(23) இடம்பெற்ற படகு விபத்தின் போது கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் இன்று (24) மதியம் சிகிச்சையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
இதில் இரு சிறுவர்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். படகு விபத்தில் சிலர் பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும், மற்றுமொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தனர். தற்போது ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.
இன்றைய தினம் (24) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(Imran Mahroof) கிண்ணியா தளவைத்தியசாலைக்கு விஜயம் செய்து படகு விபத்தில் அனுமதிக்கப்பட்டவர்களை நலன் விசாரித்து பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இந்த படகு விபத்து சம்பவம் பெரும் கவலையளிக்கிறது,
குறிஞ்சாக்கேணி பால விடயத்துடன் சம்மந்தப்பட்ட இதன் பின்புலத்தில் உள்ளவர்களைத்
தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.


அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam