தமிழர் பகுதியில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து ஆறு பேர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் போன்ற கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள மூன்று குடும்பங்களின் வீடுகளில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இன்று (9) சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 16. 5லிட்டர் கசிப்பும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கசிப்பு வியாபாரம்
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களும் சான்று பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த 6 ஆம் திகதி மாணிக்கபுரம் கிராம அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு அவர்களின் வீட்டுப் படலைகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டதையடு்த்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |