ஊரடங்கு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிநத நயணசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வியாபார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படட ஆறு சிறிய லொறிகளுடன், முச்சக்கரவண்டியொன்றையும் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி, நாவற்குடா மற்றும் ஆரையம்பதி பிரதான வீதிகளில் கோவிட் -19 பரவும் அளவிற்குச் சட்டவிரோதமான முறையில் மரக்கறி மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்களே இவ்வாறு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலமுறை ஒலிபெருக்கி மூலம் இதனைத் தடை செய்தும் அதனை மீறிச் செயற்பட்டவர்களே கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
