மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று
உடுத்துறை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று (25.11.2025) மாவீர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவஞ்சலி இன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய மாவீரர் வார ஐந்தாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


செய்தி - எரிமலை
நாகர்கோவில் குருதிக்கொடை
ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு இன்றையதினம் நாகர்கோவில் குரு குலம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த குருதி நன்கொடை நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் குருதித் தான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பங்குகொண்ட குருதி நன்கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


செய்தி - எரிமலை
அமைதியான சூழல்
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையில், மாவீரர்களின் நினைவினை போற்றும் நிகழ்வு இன்று காலை அமைதியான சூழலில் இடம்பெற்றது.

சபையின் உதவிசாளர் தயாபரன் தலைமையிலான இந்த நினைவஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் மரியாதைகளை செலுத்தினர். பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


செய்தி - தீபன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நவீன சந்தை தொகுதி வளாகத்தில் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர வர்த்தக சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில் இரண்டு மாவீரரின் தாயர் பொது ஈகை சுடரை ஏற்றிவைக்க பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் மலரஞ்சலியை தொடக்கிவைக்க ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தனை, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்களான ஜெயகோபி, பிரகாஸ், மற்றும் பருத்தித்துறை நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.


செய்தி - எரிமலை
பூனகரி
கிளிநொச்சி பூனகரியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பூநகரி வாடியடி சந்தியில் இன்று பகல் நடைபெற்ற இந்த நினைவு வணக்க நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார் மதத்தலைவர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


செய்தி - யது
மூதூர்
திருகோணமலையில் உள்ள மாவீர குடும்பங்களை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு எனும் நிகழ்வு மூதூரில் (24)இடம் பெற்றது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டில் மாவீரர் குடும்பங்களுக்காக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை குலோபல் நிறுவனத்தின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட் கால உறுப்பினருமான குமார் ஜெயக் குமார் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

செய்தி - ரொஷான்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |