அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு புதிய திட்டம்
தொழில்நுட்பம் சார்ந்த புதிய திட்டங்களை அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5G தொழில்நுட்பம்
இந்த கூட்டத்தில் இணையதள சேவை வழங்குநர்களால் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5G தொழில்நுட்பத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் விதாதா தொழில்நுட்ப நிலையங்களை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சின் ஆலோசனைக் குழுவில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் விவகாரம்
இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி தொடர்பில் உறுப்பினர்கள் குழு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்போது கடந்த வருடம் ஸ்ரீலங்கா டெலிகொம் கம்பனியின் இலாபம் 12 பில்லியன் ரூபாவாகவும் இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான இலாபம் சுமார் 6 பில்லியன் ரூபா எனவும் ஸ்ரீலங்கா டெலிகொம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 49.5 வீத உரிமையை அரசாங்கம் வைத்துள்ளதாகவும், நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால், அதே அளவு பங்குகளை தனியார் துறையும் வைத்திருக்கும் எனவும் ஸ்ரீலங்கா டெலிகொம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
