மட்டக்களப்பில் பொலிஸார் சுற்றிவளைப்பு: 59 பேர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 ஐஸ் போதைப் பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கைது நடவடிக்கை
இதன்போது, ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர், கசிப்பு உற்பத்தி, விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் அடங்கலாக 59 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று(20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
