யாழில் சீரற்ற காலநிலையால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை
கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 10 பேர் வரை உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், பதுளை, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.