மட்டக்களப்பு மாநகரசபையின் வருட இறுதி அமர்வு (Video)
மட்டக்களப்பு மாநகரசபையின் 55வது அமர்வு வருட இறுதி அமர்வாகம் இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் (T.Saravanapavan) தலைமையில் நடைபெற்றது.
இதன்போது முதல்வரின் தலைமையுரையுடன் இன்றைய சபையின் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது நிதிக்குழு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு அதற்காக அங்கீகாரங்களும் வழங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர சபையானது ஸ்திரமற்ற நிலையில் உள்ளதன் காரணமாக மாநகர சபையின் வருமானம் வெகுவாக இழக்கப்பட்டுள்ளதன் காரணமாக மாநகர சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலையுள்ளதன் காரணமாக மாகாணசபை அதற்கான நிதிகளை வழங்கும்போதே சம்பளங்களை வழங்கமுடியும் என மாநகரசபை முதல்வர் இதன்போது தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வின்போது அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் வே.தவராஜா மற்றும் மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவனின் தாயார் ஆகியோருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், நினைவுரைகளும் நடைபெற்றன.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் தவராஜா தொடர்பில் பல்வேறு நினைவுகளை சபையில் பகிர்ந்துகொண்டதுடன் அவருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அமரர் தவராஜாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமானால் அவர் உளமார நினைத்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் கிளேனி வசந்தகுமார் கோரிக்கையினை முன்வைத்தார்.






தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
