13 இளம் சிறுமிகள் உட்பட 54 பேர் கைது
பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் வைத்து 13 இளம் சிறுமிகள் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நகரில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் மூன்று இளைஞர்கள் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 முதல் 22 வயதுக்கு உட்பட்ட 39 இளைஞர்கள், விருந்தக உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam