யாழ்.செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் 47 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 12வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும்(7) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு - சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வு விரைவில்..!
அகழ்வுப் பணி
பேராசிரியர் ராஜ் சோமதேவா ஏற்கனவே செய்மதி புகைப்படத்தின் ஆதாரத்துடன் அடையாயப்படுத்திய பகுதியை யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட மாணவர்களினால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதும் புதிதாக சில மனித எலும்புத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனை விடவும் அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் இருந்து மழை நீர் வடிந்தோடுவதற்காக நேற்றைய தினம் பைக்கோ இயந்திரம் மூலமாக வாய்க்கால் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
வாய்க்கால் வெட்டும் பணி
இதன் போதும் சில மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வாய்க்கால் வெட்டும் பணியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறு பிள்ளை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள எலும்புக்்கூடு ஒன்றுடன் சில தடையங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆடைகள் , பாதணி , பொலித்தீன் மாலை, நாணயக் குற்றிகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










