எலிசபெத் மகாராணியின் 50வது ஆண்டு திருமண வைபவம்:முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த வாய்ப்பு
இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 50வது ஆண்டு திருமண வைபவத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்காக நடத்தப்பட்ட விருந்துபசாரத்தின் போது அனைத்து அரச தலைவர்களின் சார்பில் அரச தம்பதியை வாழ்த்தி உரையாற்றும் வாய்ப்பு தனக்கே கிடைத்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ள குறிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் அவரது கணவரது 50 வது ஆண்டு திருமண வைபவம் கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
அந்த வைபவத்தில் இலங்கையின் அன்றயை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்துபசார நிகழ்ச்சியில் வாழ்த்து கூறி ஆற்றிய உரையினையும் தனது முகநூலில் இணைத்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
