ஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு ஆரம்பம்
ஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு, இத்தாலியில் உள்ள அபுலியாவில் ஆரம்பமாகியுள்ளது.
50ஆவது உச்சி மாநாடானது, இன்று (13) முதல் நாளை மறுதினம் (15) வரை நடைபெறவுள்ளது.
ஜி7 கூட்டமைப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன.
மோடிக்கு அழைப்பு
இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |