யாழில் இடம்பெற்ற பொன் சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்
தியாகி பொன். சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல், இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்ட சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் அஞ்சலிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு, இன்று (05.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், அதன் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
உரும்பிராய்
தியாகி பொன் சிவகுமாரனின் (Pon Sivakumaran) 50ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று (06.05.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்ததுடன் அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்திய டக்ளஸ்
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தியாகி பொன் சிவகுமாரனது சமாதி அமைந்துள்ள வேம்பிராய் மயானத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |